வெலிங்டன்: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 26 ரன், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் இரட்டை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 363 ரன் சேர்த்தது.வில்லியம்சன் 215 ரன் (296 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்), டேரில் மிட்செல் 17 ரன் எடுத்து பெவிலியன் திருபினர். நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிகோல்ஸ் 200 ரன் (240 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), பிளண்டெல் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது. ஒஷதா 6 ரன் எடுக்க, குசால் டக் அவுட்டானார். கேப்டன் கருணரத்னே 16 ரன், பிரபாத் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App