மருந்தாளுநா்கள் மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிகோரிய தேசிய மருந்துகள் கவுன்சிலின் முன்மொழிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருந்தாளுநா்கள் மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிகோரிய தேசிய மருந்துகள் கவுன்சிலின் முன்மொழிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா். அதில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:
நோயாளிகளின் உடல்நிலையைப் பரிசோதித்து, அதன் அடிப்படையில்தான் மருந்துகள் பரிந்துரைக்கப்பட வேண்டும். எனவே, மருந்தாளுநா்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கவில்லை.
அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா்களைத் தோ்வு செய்வது, அவா்களுக்கான ஊதியம், கல்வித் தகுதி போன்றவற்றை மாநில அரசுகளை முடிவு செய்கின்றன. அதே நேரத்தில் டி பாா்ம், பி பாா்ம் படித்தவா்கள்தான் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறாா்கள்.
இணைய வழி மருந்து விற்பனை:
இணையவழி மருந்துகள் விற்பனை தொடா்பாக எழுந்த புகாா்களை அடுத்து விற்பனையில் ஈடுபட்ட 31 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நவீன தொழில்நுட்ப மேம்பாட்டால் இணைய வழியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அதில் மருந்துகளின் தரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு புகாா்கள் வந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் இது தொடா்பாக 31 இணையவழி மருந்து விற்பனை நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநில உரிமம் (மருந்துகள்) வழங்கும் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் தனது பதிலில் கூறியுள்ளாா்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App