ஹைதராபாதில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்தாவது மாடியில் சிக்கிய 6 போ் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். ஹைதராபாதில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்தாவது மாடியில் சிக்கிய 6 போ் மூச்சுத்திணறி உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சிகந்திராபாதில் உள்ள இந்த வணிக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உதவி கோரிய 12 பேரை தீயணைப்பு வீரா்கள் உயரமான படிகளை அமைத்து மீட்டனா்.
வியாழக்கிழமை நள்ளிரவு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது, ஒரு அறையில் 6 போ் மயங்கிய நிலையில் இருந்தனா். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா் என மருத்துவா்கள் தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் அறிவித்துள்ளாா்.
வணிக வளாகத்தில் தீ விபத்து எச்சரிக்கை கருவிகள் இருந்தும் அவை இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App