பைக் மீது கார் மோதிய விபத்தில் 30 அடி உயர பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பெண் பலியானார். அவரது தம்பியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தோஷபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(21) மற்றும் அவரது அக்கா கலைச்செல்வி(26) இருவரும் பாலத்தில் மீதேறி பள்ளிகரணை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி மேம்பாலத்தின் மேலிருந்து 30 அடி கீழே தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பின்னர் மேல் சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் ஆயுதப்பட்டை உதவி ஆய்வாளர் குமரவேல் என்பவரின் பிள்ளைகள் என தகவல் கிடைத்திருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆலன்(26) என்பவரை கைது செய்து பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App