இயக்குநர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் படங்களுக்கான வித்தியாசம் இதுதான் என ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்சியூ என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எம்சியூ என்பது மணிரத்னம் சினிமாட்டிக் யுனிவர்ஸ். பொன்னியின் செல்வன்-2 படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது.
20.3.2023 pic.twitter.com/NYE6q3Smaz
— Trish (@trishtrashers) March 17, 2023
இதில் த்ரிஷா கையில் வாழுடன் நிற்கும் காட்சிகளும் எதிரில் நடிகர் கார்த்தி கண்களை கட்டி மணிடியிட்டு இருப்பது போல போஸ்டர் வெளியானது. இந்தப் போஸ்டரில் த்ரிஷாவின் அழகினை பலரும் புகழ்ந்து வரும் நிலையில் புதிய டிரெண்ட் ஆரம்பித்துள்ளது.
இந்தப் போஸ்டரில் கார்த்தியின் தலைகள் துண்டிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட போஸ்டரை எல்சியூ எனக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். காரணம் லோகேஷின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கும். விக்ரம் படத்தில் நடிகை காயத்ரியின் தலை துண்டிக்கப்பட்ட காட்சிகள் இருக்கும்.
MCU LCU pic.twitter.com/tIvHdRL2k9
— Name (@YourNanban) March 18, 2023
தற்போது லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்து வருவதால் இந்த இரண்டு படங்கள் பற்றியும் பேச்சு எழத்தொடங்கியுள்ளது. லோகேஷின் படங்களில் கதாநாயகிகள் வந்தாலே இறந்துவிடுவார்கள் என ரசிகர்கள் முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 படமும், அக்டோபர் மாதம் லியோ படமும் வெளியாக உள்ளது. இரண்டு பெரிய படங்களில் த்ரிஷா நடித்திருப்பதால இந்தாண்டு த்ரிஷாவிற்கு சிறந்தாண்டாக இருக்கும்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App