English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Tue. Dec 6th, 2022
0 0
Read Time:4 Minute, 30 Second

கடலில் குளிக்கச் சென்ற கடற்படை வீரர் கடல் அலைகள் சிக்கி பரிதாபமாக பலியானார். துணியால் மூடி மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட உயிரிழந்த மகனின் முகத்தை துணியை அகற்றி பார்த்து தாய் முகத்தை தழுவி முத்தமிட்டு அழுதது அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

மதுரை மாவட்டம் திருநகர், திருமங்கலம், ஒத்தக்கடை பகுதிகளைச் சேர்ந்த வட்சன்,, விக்னேஷ், விக்னேஷ்வர், பிரவீன் குமார், வைரமுருகன், அருண்பாண்டியன் உள்ளிட்ட ஆறு பேரும் சனிக்கிழமை மதியம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்துள்ள அரியமான் கடற்கரைக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.

இதில் மதுரை அழகப்பா நகரை சேர்ந்த வட்சன் இந்திய கடற்படைக்கு சொந்தமான கோயம்பத்தூர் ஐ.என்எஸ் அக்ராணி கடற்படை முகாமில் கடற்படை வீரராக உள்ளார். மற்ற அனைவரும் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக்கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.

அரியமான் வந்த ஆறு பேரும் மாலை ஐந்து மணிக்கு மேல் கடலில் குளித்துள்ளனர். இதனை கண்ட மரைன் போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் குளித்த அனைவரையும் அப்புறப்படுத்தினர்.

போலீசார் அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு முறை கடலில் குளித்துவிட்டு வருவதாக கூறி விட்டு கடற்படை வீரர் வட்சன் மற்றும் கல்லூரி மாணவர் விக்னேஷ் இருவர் மட்டும் கடலுக்குள் சென்றுள்ளனர்.

கடலில் குளிக்க சென்ற இருவரும் வெகு நேரமாக கரைக்கு வராததால் அச்சமடைந்த சக நண்பர்கள் அரியமான் மரைன் சோதனை சாவடியில் இருந்த மரைன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மரைன் போலீசார் கடற்கரையில் தேடிய போது கடற்படை வீரர் வட்சன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினார்.

மேலும் வட்சனுடன் கடலில் குளிக்க சென்ற மாயமான விக்னேஷை தொடர்ந்து மரைன் போலிசார் தேடி வருகின்றனர்.

கடல் சீற்றமாக உள்ளதால் இரவு நேரத்தில் கடலில் மாயமான விக்னேஷை தொடர்ந்து தேடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஞாயிற்று கிழமை அதிகாலை உச்சப்புளியில் உள்ள இந்திய கடற்படை சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து விமானபடை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் மற்றும் மரைன் ரோந்து படகுகளில் சென்று தேட திட்டமிட்டுள்ளனர் .

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வட்சன் உடலை கைப்பற்றிய மரைன் போலீசார் உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் வைத்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட கடற்படை வீரர் வட்சன் உடல் துணியில் சுற்றப்பட்டு ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டது. அப்போது வட்சனின் உடலை பார்த்த அவரது தாயார் முகத்தில் மூடி இருந்த துணியை அகற்றி விட்டு வட்சன் முகத்தை தொட்டு தழுவி அழுதது அருகில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

அரியமான் கடற்கரைக்கு சுற்றுலாக்காக வந்தவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *