English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:2 Minute, 44 Second

பென்னாகரத்தில் வீட்டிற்குள்ளேயே மது பாட்டில் தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நகரப்பகுதியில், அரசு பள்ளிகள் அருகே, வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்தத் தகவலை அடுத்து சுற்றுப்புற பகுதிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு வீட்டில் சினிமா பட பாணியில் டிவி பெட்டிக்கு பின்பாக, சிறிய அறை அமைத்து, அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி, அதில் சில ரசாயனங்களையும், இலை தலைகளையும் சேர்த்து, அதிக போதை வஸ்துவாக மாற்றி, விலை உயர்ந்த வெளிநாட்டு மது பாட்டில் என கூறி விற்பனை செய்து வந்ததை கண்டு பிடித்தனர்.

ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. போலிசார் வீட்டில் சோதனை செய்த போது 621 விலை உயர்ந்த மது பாட்டில்களை கைப்பற்றி, இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் என தெரியவந்துள்ளது. ஆண் பெண் என அனைவரும் இணைந்து, ஒரு குடும்பமே மது பாட்டில் பதுக்கி, மது தயாரித்து, விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என போராடி வரும் பாமகவின் கோட்டையாக கருதப்படும் பென்னாகரத்தில், வீட்டுக்குள்ளயே மது பாட்டில் பதுக்கி தயாரித்து குடும்பமே விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *