English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Mon. Dec 5th, 2022
0 0
Read Time:3 Minute, 28 Second

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிப்பால், 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை,  கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்பி வருகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கன மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையிலிருந்து பிரதான மதகு வழியாக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில்  திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 13,000 கன அடியாகவும், சனத்குமார் நதியில் 3,000 கன அடி தண்ணீர் என, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி நுரை பொங்கி தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தொடர்ந்து 2 மாதத்திற்கு மேலாக  ஆற்றில் தண்ணீர் செல்வதால் நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, சிங்கேரிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர், டி.அம்மாபேட்டை உள்ளிட்ட  பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *