English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Dec 9th, 2022
0 0
Read Time:2 Minute, 43 Second

நாட்றம்பள்ளி அருகே கை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உறவினரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பேட்டை மாரியம்மன் கோயில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் அண்ணாதுரை (வயது 38). இவருக்கும் கொத்தூர் அருகே வீராசாமி வட்டம் சேர்ந்தவர் முருகன் (வயது 56) ஆகிய இருவரும் உறவினர்கள்.

இந்நிலையில் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கொத்தூர் செக்போஸ்ட் அருகே டீ கடையில் டீ சாப்பிடும் போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரது மோட்டார் சைக்கிள் இருவரும் கல்லால் தாக்கி உள்ளனர். இதனால் இருவரது மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.

இதனால் அண்ணாதுரை முருகனிடம் ஏன் தகராறு செய்தாய் என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், முருகன் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டி தாக்கியுள்ளார். இதனால் அண்ணாதுரைக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவருக்கும் கையால் தாக்கி கொண்டனர். இதனால் படுகாயம் அடைந்த அண்ணாதுரை, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து கை துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *