English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:2 Minute, 19 Second

மூணாறு ராஜமலை நயமக்காடு பகுதியில் அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினர் அமைத்த கூண்டியில் சிக்கியதால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு ராஜமலை நயமக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக புலி நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக புலியின் அட்டகாசம் அதிகரித்து அங்குள்ள மாட்டு தொழுவத்தில் இருந்த மாடுகளை வேட்டியாடி கொன்றது.

இரு தினங்களில் 10 மாடுகளை கொன்றது. மூன்று மாடுகள் படுகாயமடைந்தது. இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வனத்துறையினர் 4 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைத்தனர். மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு புலி சாலையோர புதரிலிருந்து வெளியே வருவதை சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். புலி ஆக்ரோஷமாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், நெய்மக்காடு வனத்துறையினர் அமைத்த கூண்டில் புலி சிக்கியது. உடனடியாக கூண்டில் சிக்கிய புலியை வனத்துறை கால்நடை மருத்துவர் பரிசோதனை நடத்தினர். புலியை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *