English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Mon. Dec 5th, 2022
0 0
Read Time:2 Minute, 31 Second

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடைபெற்று வருகிறது.

கடந்த 7 நாட்களில், 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்கம் பட்டு, ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நாண்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர், அதன் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனவும், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *