English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:3 Minute, 3 Second

புதுச்சேரியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன் மற்றும் சிசிடிவி கேமிரா பதிவாகும் டிவிஆர் இயந்திரம் ஆகியவற்றை திருடி சென்ற மூன்று சிறார் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி வில்லயனூர் வி.தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் லோகஷ்வரன். இவர் தனது தந்தை உடன் இணைந்து வில்லயனூர் காவல் நிலையம் அருகே விழுப்புரம் பிரதான சாலையில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

கடந்த செப்டமர் மாதம் 8 ஆம் தேதி இரவு இவரின் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ப்ளூ டூத் ஸ்பிக்கர், ஹெட்செட் , சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆர் இயந்திரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இது தொடர்பாக லோகேஷ்வரன் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் மூன்று நபர்கள் செல்போன் கடை அருகே செல்வது பதிவாகி இருந்ததை ஆய்வு செய்தனர். அப்போது, வில்லியனூர் எம்.ஆர் நகரை சேர்ந்த மூன்று சிறார்கள் என தெரியவந்தது. இதை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறார் ஒருவரின் உறவினரான சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கார் டிரைவர் மாலிக் பாட்ஷா கொடுத்த ஆலோசனை படி இந்த திருட்டு சம்பவம் அரங்கேற்றியதும், அவர்கள் திருடிய செல்போன்களை மாலிக் பாஷாவிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாலிக் பாஷாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 16 விலை உயரந்த செல்போன்கள், ப்ளூ டூத் ஸ்பிக்கர், ஹெட்செட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று சிறார்களை சீர் திருத்த பள்ளியிலும், மாலிக்கை புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையிலும் அடைத்தனர்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *