English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:5 Minute, 31 Second

21 ஆப்களில் கடன் வாங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பாரதிதாசன் காலனி பகுதியை சேர்ந்த நரேந்திரன் இளைஞர், பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெருங்குடியில் உள்ள பிரபலமான சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மாதம் சுமார் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார்.

இவர் தன்னுடைய செல்போன் மூலமாக கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் ஆப் மூலமாக ரூ.5,000 கடனாக பெற்று இருக்கிறார். அதன் பின்னராக மற்றொரு இரண்டு ஆப்களில் தலா ரூ.5,000 என ரூ.10,000 கடனாக பெற்று இருக்கிறார். பின்னர் அந்த கடனை முழுவதுமாக கட்டி முடித்திருக்கிறார்

இதன் பின்பாக, ரூ.5,000 கடன் கொடுக்கக்கூடிய ஆப்கள் என ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு ஆப்களிலும் கடன் வாங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போகவே, ஒரு ஆப்பில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, மற்றொரு ஆப்பில் கடன் வாங்கியதும், பின்னர் அதை அடைப்பதற்காக மற்றொரு ஆப் என கிட்டத்தட்ட மொத்தமாக 21 ஆப்களில் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ.75,000 வரை ஆன்லைன் ஆப்கள் மூலமாக கடன் வாங்கி இருக்கிறார்.

மொத்தமாக 21 ஆப்களில் வாங்கிய கடன்களில் சுமார் பத்து ஆப்களில் வாங்கிய கடனை அடைத்து முடித்து இருக்கிறார். மீதமுள்ள 15 ஆப்களில் கட்ட வேண்டிய தொகையில் பாதி தொகை நிலுவையில் வைத்திருக்கிறார்.

இதன் பின்னர் கடன் கொடுத்த ஆப் நிறுவனங்கள், பல்வேறு வகையில் நரேந்திரனுக்கு மன உளைச்சலை கொடுத்து வந்துள்ளனர். மாஃபிங் செய்யப்பட்ட அவருடைய ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை அவருடைய பெற்றோர் சகோதரி உறவினர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இதற்கு பின்னர் அவரது தந்தை சீனிவாச ராஜா கையில் இருந்த ரூ.50,000 பணத்தை கொடுத்து கடனை அடைத்து உள்ளார் நரேந்திரன். அதன் பின்பாகும் கடன் கொடுத்த ஆன்லைன் ஆப்கள் தொடர்ந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளன.

இதனால் கடந்த இரண்டு வார காலமாக வீட்டில் யாருடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்திரலையில் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காக நரேந்திரனுடைய பெற்றோர்கள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவருடைய தாயார் தொலைபேசி எண்ணுக்கும் ஆன்லைன் ஆப் நிறுவனத்திடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் வாங்கிய கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தி விடு என மிரட்டும் தோணியில் பேசியிருக்கிறார்கள்.

இதனை தனது மகனிடம் தெரிவிப்பதற்காக, தாய் மகனுக்கு போன் செய்திருக்கிறார் பலமுறை அழைத்தும், மகன் அழைப்பை எடுக்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் இருவரும் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் பலமுறை கதவை பலமாக தட்டி இருக்கிறார்கள்.

இறுதியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்த எம்ஜிஆர் நகர் போலீசார் உடனடியாக நரேந்திரனுடைய சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன தேவைக்காக நரேந்திரன் கடன் வாங்க ஆரம்பித்தார் என்ற விவரமும் அது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *