English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Dec 9th, 2022
0 0
Read Time:3 Minute, 49 Second

ரிசாட்டில் 19 வயது இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம் உத்தரகாண்டில் நடந்துள்ளது.

உத்தரகண்ட் பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை வைத்துள்ளார். அந்த ரிசாட்டில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளராக பணிபுரிந்தார்.

19 வயதான அந்தப் பெண் கடந்த திங்கட்கிழமை மாயமாகி உள்ளார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடிய போதிலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.

இருப்பினும், போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதில் புல்கித் ஆர்யா தான் தங்கள் மகள் மாயமானதற்குக் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் மகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவருடன் ரிசாட்டில் பணியாற்றி வந்த மேலும் இரு ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இளம் பெண்ணை கொலை செய்து அருகே இருந்த கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தன்னுடனும் தனது ரிசார்ட்டில் வரும் விருந்தினர்கள் உடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அங்கிதாவிடம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யா வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு அங்கிதா தொடர்ந்து மறுத்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசி பிரச்சினையை முடித்துக் கொள்ளக் கடந்த செப். 18ஆம் தேதி அங்கிதாவை அவர்கள் வெளியே அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கிதா மற்றும் புல்கித் ஆர்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிய நிலையில், புல்கித் ஆர்யா அங்கிதாவை கொன்றதும் அதன் பின்னர் அவர்கள் சடலத்தைக் கால்வாயில் வீசியதும் தெரிய வந்தது.

பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ரிசார்ட் இடிக்கப்பட்டது ரிசார்டில் வேலை செய்த அங்கிதா பண்டாரி என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுசில்லா கால்வாயில் இருந்து அங்கிதா பண்டாரியின் உடல் எடுக்கப்பட்டுள்ளது உடலை அடையாளம் காண அவரது உறவினர்கள் அழைக்கப்பட்டனர்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *