English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 38 Second

 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 நபரை கைது செய்து சூதாட்ட கிளப்பின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை கும்மாளம்மாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மேல் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் அடிக்கடி நிறைய நபர்கள் வந்து செல்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு கிடைத்த தகவலை நடத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை ஆணையரின் தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் புகாரி மற்றும் குமார் தலைமையிலான போலீசார் வீட்டை சோதனை மேற்கொண்ட போது அங்கு 27 நபர்கள் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டை லீசுக்கு எடுத்து சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் பெறாமல் போலியாக கிளப் நடத்தி அதற்கு மாதாமாதம் மெம்பர்ஷிப் கட்ட வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும் உண்மையை கிளப்பில் நடப்பது போன்றே பணத்தை கொடுத்து போக்கர் சில்லுகள் பெற்று விளையாடி வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது 27 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கட்டிடத்தின் உரிமையாளர் யார்? கிளப் நடத்தி வருபவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து 13 சீட்டு கட்டுகள், 825 போக்கர் சில்லுகள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டுள்ளன.

சட்ட விரோதமாக சர்வ சாதாரணமாகவும் மூன்று பள்ளிகளுக்கு அருகில் குடியிருப்பு பகுதியில் சாலையில் உள்ள கட்டிடத்தில் நடைபெறும் கிளப்பிலிருந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.