English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 29 Second

சேலத்தில் சோம்பு, சீரகத்தில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சேமிப்பு குடோனில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், 12,000 கிலோ சோம்பு பறிமுதல் செய்துள்ளனர்.

 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார், ராமன்லால் என்பவர்கள் ஏகே.கார்ப்பரேஷன் என்ற சீரகம், சோம்பு, கடுகு சேமிப்பு குடோன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் இந்த குடோனில் கலப்படம் செய்யப்பட்டு சோம்பு, சீரகம் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 8,250 கிலோ சீரகம்,4180 கிலோ சோம்பு மற்றும் கலப்படத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த வேதிப்பொருட்கள் செயற்கை வண்ண நிறமிகள், மாவு பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த கலப்பட பொருள் உணர்த்துவதற்கான இயந்திரம் மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர்.

இங்கு பறிமுதல் செய்யப்பட்ட சோம்பு மற்றும் சீரகத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தில் அறிக்கையில் விவரம் பெற்று உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மக்கள் அன்றாட பயன்படுத்தும் சோம்பு சீரகத்திலும் கலப்படம் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.