English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:4 Minute, 22 Second

மின் கட்டண உயர்வை கண்டித்து மூன்றாவது நாளாக விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விசைத்தறி கூடங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர். இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர்.

பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு, குறு தொழில் பிரிவிலிருந்து விசைத்தறியை தனியாக பிரித்து தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்று நாளாக கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 

மூன்றாவது நாளாக நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் 150 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் காடம்பாடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் பேசும்போது, தமிழக அரசு அழைத்து பேசும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். அரசு தலையிட்டு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர், அரசு இப்படி அலட்சியம் காட்டினால் விசைத்தறி தொழில் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் என எச்சத்தார்.

அரசு உயர்த்திய மின்சாரத்தை தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும், ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் இது குறித்து முறையிட்டு இருப்பதாகவும், ஆனால் எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.