English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 11 Second

இந்தியாவில் 18% பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்து புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை எப்படி கட்டுப்படுத்துவது, பாதிக்கபட்டவர்களுக்கு எவ்வாறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார், இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தின் மாற்றம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறினார்.

இதனை தடுக்க உணவு பழக்கவழக்கங்களை மீண்டும் பாரம்பரிய முறையில் மாற்ற வேண்டும் எனவும், மேலும் ஆரம்ப நிலையில் கண்டறிய பெண்கள் அடிக்கடி மார்பக புற்றுநோய் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.