English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 59 Second

தொப்பி ஒரு கேடா என கூறி அரபி வகுப்புக்கு சென்று திரும்பிய இஸ்லாமிய சிறுவனை தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் சத்யநாராயணன் தெருவை சேர்ந்த 12 வயது சிறுவன், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் மாலை நேரத்தில் மசூதியில் அரபி வகுப்புக்கு சென்று கற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு ஏழு மணி அளவில் சிறுவன் கோடம்பாக்கம் சக்கரபாணி தெருவில் உள்ள மசூதிக்கு சென்று அரபி வகுப்பை முடித்துவிட்டு, சைக்கிளில் இரவு 8 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கோடம்பாக்கம் ஆரிய கவுடா சாலை கண்ணதாசன் தெரு சந்திப்பில் வரும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனை தாக்கியுள்ளார்.

பின்னர் சிறுவனிடம் தொப்பி ஒரு கேடா என கூறி தாக்கிய போது, அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பியுள்ளார். காயமடைந்த சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் மசூதியை சேர்ந்த நபர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை தேடி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், குறுகலான அந்த சாலை சந்திப்பில் இருவரும் நேருக்கு நேர் வாகனங்களில் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் சிறுவனை தாக்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் மத ரீதியாக வேண்டுமென்றே திட்டினாரா? அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகாரா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.