English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:3 Minute, 18 Second

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக வாதிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்கள் மீதான 3-ஆவது நாள் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் முன் வைத்த முக்கிய வாதங்கள்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-ஆவது சட்டத் திருத்தம் அரசமைப்பு சாசனத்தை மீறியதாகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை.

சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் நலிவுற்ற நிலையிலும், எளிதில் சுரண்டலுக்கு ஆளாகும் நிலையிலும் உள்ளனர். இதனால்தான் அரசமைப்பு சாசனம் 46-ஆவது பிரிவில், நலிவுற்ற நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்வி, பொருளாதார நலன்களை சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும், சமூக அநீதி, அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

சமத்துவத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டம் பாதிக்கிறது. இவ்வாறு திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் வாதிட்டார்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.