English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:3 Minute, 56 Second

சென்னையில் ஏடிஎம் மையங்ககளில் கொள்ளையடித்த வழக்கில் புழல் சிறையில் இருந்த பல்கேரியா நாட்டை சோ்ந்த 3 போ் பலத்த பாதுகாப்புடன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னை நகரில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் ஒரு கும்பல் நூதன முறையில் போலி எடிஎம் காா்டுகளை பயன்படுத்தி ஸ்கிம்மா் கருவி உதவியுடன் பணத்தை கொள்ளையடித்தனா். இதையடுத்து சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசாா் தீவிர விசாரணை நடத்தி கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் சென்னை துரைப்பக்கம் பகுதியில் நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த பல்கேரியா நாட்டை சோ்ந்த நிக்கோலா, போரீஸ், லூம் போப்பி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவா்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் காா்டுகள், லேப்டாப், இந்திய மற்றும் அமெரிக்க டாலா்களை கைப்பற்றினா். பல்கேரியா்கள் 3 பேரும் விசாரணை கைதிகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனா்.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமின் கிடைத்தது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனா். கடந்த 2021ம் ஆண்டு சென்னை நீதிமன்றம் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இதையடுத்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 3 பல்கேரியா்களும், சென்னை புழல் சிறைக்கு தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டனா். இந்த நிலையில் பல்கேரியா நாட்டு அரசு, இந்திய அரசிடம் பேசி தங்கள் நாட்டு கைதிகளை ஒப்படைக்கும்படியும், அவர்களுடைய தண்டனை காலத்தை தங்கள் நாட்டு சிறையில் கழிப்பார்கள் என்றும் கூறியது. அதற்கு இந்திய அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து, பல்கேரிய நாட்டில் இருந்து வந்த தனிப்படை போலீசார் முறைப்படி சென்னை புழல் சிறையில் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றனா். பின்னர் பல்கேரியா நாட்டிற்கு அழைத்து செல்ல, குடியுறிமை பிரிவு அதிகாரிகளிடமும் முறைப்படி அனுமதி பெற்று, 3 பேருக்கும் அவசர கால சான்றுகள் வழங்கப்பட்டன.

சென்னை புழல் சிறையில் இருந்த 3 பல்கேரியர்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க இலாகா சோதனைகள் முடிக்கப்பட்டு, அதிகாலை 4:30 மணிக்கு தோகா செல்லும் விமானத்தில் கத்தார் நாட்டு வழியாக பல்கேரிய நாட்டிற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.