English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:3 Minute, 4 Second

ட்விட்டரில் மோதிக்கொண்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை விமர்சித்த கெஜ்ரிவால், புதிய மது கொள்கையில் ஊழல் நடைபெற்றதை விமர்சித்து காங்கிரஸ் பதிலடி.

ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இயக்கத்தில் பணியாற்றி பின்னர் ஆம் ஆத்மி என்ற கட்சியை உருவாக்கி அதனுடைய தேசிய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். ஊழலுக்கு எதிரான கட்சி என பெயர் பெற்ற ஆம் ஆத்மி தலைநகர் டெல்லியில் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஏராளமான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இதனிடைய பஞ்சாப் மாநிலத்தில் தங்களது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக இன்று குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் விலைக்கு வாங்க நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இல்லை என விமர்சித்தார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியை கிண்டல் அடிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள அக்கட்சி இந்த தலைமுறையின் சிறந்த வியாபாரி காங்கிரஸ் கட்சி என விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு டெல்லியின் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் குறித்து விமர்சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.