English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:4 Minute, 3 Second

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டிஜிபி-மனோஜ் குமார் லால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி காவல்துறை, தனியார் பங்களிப்புடன் இணைந்து 25 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளது. இதன் தொடக்க விழா புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல்துறை டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், உருளையான்பேட்டை தொகுதியின் எம்எல்ஏ நேரு ஆகியோர் புதிய கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை சமூக பிரச்சினையாக மாறி வருகிறது என்று கூறிய அவர், கடந்த ஒரு மாதமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருவதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய டிஜிபி, கஞ்சா விற்பனை குற்றவாளிகளை கண்காணிப்பு கேமரா மூலமாக மட்டுமே கண்டு பிடித்து விட முடியாது என்றும், போலீசாருடன், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால் தான் இதற்கு தீர்வு காண முடியும் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

புதுவையில் கஞ்சாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழக பகுதிகளில் இருந்து சிலர் ஊடுருவி வந்து கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள் என்றார். அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த டிஜிபி, பொதுமக்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக தகவல் கிடைத்தால் 9489205100 என்ற எண்ணில் தகவல் கொடுக்கலாம் என்றார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்த டிஜிபி, புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.