English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 15 Second

கொல்கத்தாவில் சீன லோன் ஆப் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு லோன் ஆப்கள், மக்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, தவணை செலுத்த தாமதமானால், மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுபோன்ற சீன லோன் ஆப்களை தடுப்பது குறித்து அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் லோன் ஆப்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சீன லோன் ஆப், கேம் ஆப் நிறுவனங்களுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை ரூ.7 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர்.

சோதனையின் முடிவில் மொத்தமாக எவ்வளவு பணம், பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பண பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.