English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 4 Second

பஞ்சாபில் கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து 11 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர்.

பஞ்சாபில், காங்கிரஸ் நிர்வாகியும், பஞ்சாபி பாடகருமான சித்து மூஸ் வாலா கொலை வழக்கில், கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரன்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், லாரன்ஸ் பிஸ்னோய் கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை மொகாலியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 11 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தது? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது போன்ற தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தடுத்த நடவடிக்கையால் கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் கும்பலை முற்றிலுமாக ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.