English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 42 Second

கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என பி.எஸ்.என்.எல் அரசு தொலைத்தொடர்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, பிராட்வே பகுதியில் பி.எஸ்.என்.எல் அரசு தொலைத்தொடர்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, இந்த கூட்டுறவு சங்கத்தின் அனைத்து ஊழியர் தொழிற்சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இப்போராட்டத்தில் 6 ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நள்ளிரவை கடந்தும் போராட்டம் நடைப்பெற்றது.

இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரும், கூட்டுறவு சங்க, அனைத்து ஊழியர் தொழிற்சங்க பொருளாளருமான வீரராகவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஆறு மாத காலமாக இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை உள்ளதாகவும் இதுகுறித்து சங்க செயலாளரிடம் முறையிட்டால் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஊதியத்தைப் பற்றி கேட்டால் எனக்கு மேல் அதிகாரி இருக்கிறார், அவரிடம் கேட்டு தான் உங்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று புறக்கணிக்கும் வகையில் பேசுவதாகவும் தற்போது இந்த சங்கம் அழிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே 54 ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பிவிட்டதாகவும், தாங்கள் ஊதியம் கேட்டு முறையிடுவதால் தங்களையும் கட்டாய விடுப்பில் செல்ல மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.