English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 38 Second

சின்னசேலம் அருகே சாராயம் கடத்திச் சென்றவரை போலீசார் விரட்டியபோது தப்பி ஓடியவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 30 ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி ரயில்வே கேட் அருகில் ஆத்தூர் டி எஸ் பி ராமச்சந்திரனின் தனிப்படை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த மூன்று இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது இரண்டு பேர் மோட்டார் சைக்கிள் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சிக்கினார்.

விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் உதயகுமார் என்பது தெரிவந்தது. 3 மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டுவந்த 14 லாரி ட்யூப் மூலமாக 490 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அவரை கைது செய்து தலைவசால் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் துரத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் இரண்டு பேரும் ஓடிபோகிவிட்டனர் என திருப்பி சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையில் எட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா,
சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராம எல்லையில் உள்ள விவசாய கிணற்றில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து இறந்த இளையராஜா தகப்பனார் மாணிக்கம் சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகன் 30 ஆம் தேதி வீட்டில் இருந்து அவரது மனைவியின் ஜாக்டேட்டை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு டெய்லர் கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில், சின்னசேலம் அருகே விவசாய கிணற்றில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போய் பார்த்த போது என மகன் என்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். இவர் எப்படி இறந்தார், அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை கொண்டு வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.