English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:2 Minute, 20 Second

கன்னியாகுமரி மாவட்டம் அருகே மது குடித்து கொண்டிருந்தபோது நண்பர்களால் இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிய நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள குலாளர் தெரு பகுதியின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுவாங்கி வாலிபர்கள் மது குடித்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இரவு அந்த பகுதியில் திடீர் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் என்ன ஏதென்று அப்பகுதிக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். கூட்டத்தை கண்டதும் அப்பகுதியில் மறைந்திருந்த 3 இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். உடனே அவர்களை இளைஞர்கள் துரத்தி பிடிக்க முயன்றபோதுு, 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

அவரை பிடித்து வைத்துக் கொண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பொதுமக்களிடம் பிடிபட்ட இளைஞர் குருந்தன்கோடு அடுத்த முக்கலம்பாட்டை சேர்ந்த அசோக் என்பதும், தப்பிய ஓடிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த அஜின்ஜோஸ் என்பதும் தெரிய வந்தது. தப்பி ஓடிய இளைஞர்கள் யார் என்பது குறித்தும், இறந்து போன வாலிபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.