English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 51 Second

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பள ராஜா ஜாமீன் வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா என்கிற அப்பளராஜா. இவர், விகேபி நகர் நலச்சங்க தலைவராக இருந்த ஆண்டியப்பன் என்பவரை 2014ல் கொலை செய்த வழக்கு, மதுரை 6வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில், கடந்த 2019ல் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அப்பளராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.

அரசு தரப்பில், மனுதாரர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இன்னும் 5 பேரின் சாட்சியம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தற்போதுள்ள சூழலில் ஜாமீன் வழங்க முடியாது என்றார். அதே நேரம், சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை கீழமை விசாரணை நீதிமன்றம் 4 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.