English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:4 Minute, 12 Second

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தி விவகாரத்தில், தேர்வு நடந்த கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நெருக்கினார்.

கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியரிடம் அதிகாரிகள் கடுமையான முறையில் பரிசோதனை நடத்துவதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே ஆயூரில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு நடந்தது. இங்கு தேர்வு எழுத வந்த பல மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சில மாணவிகளின் பெற்றோர் கொட்டாரக்கரை டிஎஸ்பியிடம் புகார் செய்தனர்.

கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறினர். நீட் தேர்வை நடத்தும் ஏஜென்சியின் ஆட்கள் தான் பரிசோதனை நடத்தினார்கள் என தெரிவித்திருந்தனர்.

இந்த செயலுக்கு பலரும் கண்டும் கண்டனம் தெரிவித்த நிலையில் மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்த உத்த்ரவிட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற ஆயூர் மார்த்தோமா கல்லூரியில் மாணவ்ர் அமைப்பினர் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வளாகத்திற்குள் சென்ற மாணவர் அமைப்பினர் கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க வந்த காவல்துறை மீது கற்களை வீசினர். இதில் போலீசார் பலர் காயமடைந்துள்ளனர்.

கல்லூரி வளாகத்தில் காலை முதல் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றிய சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என கல்லூரி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததையடுத்து மீண்டும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, நீட் தேர்வெழுதும் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில், அதிகாரிகளின் தீவிர குளறுபடிகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்வு பாதுகாப்பு குறித்து போதிய பயிற்சி பெறாத பத்து பேர் கொண்ட கும்பலால் மாணவிகள் அவமானப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார், கல்லூரி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.