நேற்று மூடப்பட்ட 987 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தனியார் பள்ளிகள் சங்கத்தினர், பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டனர் .
இதன் காரணமாக பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 11335 தனியார் பள்ளிகளில், 10,348 பள்ளிகள் முழுமையாக இயங்கின என்றும், 987 பள்ளிகள் இயங்க வில்லை எனவும் கல்வித்துறை ஆய்வில் தெரியவந்தது.
இந்த 987 பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். புதுக்கோட்டை, சேலம், தேனி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 84 விழுக்காடு பள்ளிகளில் இயங்கவில்லை. இதுபோன்ற பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
அரசின் அனுமதி இன்றி பள்ளிகளை மூடியது ஏன் எனவும், இதற்கு ஒரு வார காலத்திற்குள்ளாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி நிர்வாகங்கள் தரும் விளக்கத்தை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
For more news update stay with actpnews.com
Android App Facebook Twitter Dailyhunt Share Chat Telegram Koo App
For more language news updates
தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ