கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்யும் போது தங்களது தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ராமலிங்கம் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு நேற்று முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், கிரிமினல் விவகாரங்களில் தலையிட இந்த அமர்வுக்கு அதிகார வரம்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் ராமலிங்கம் தரப்பில் வழக்குரைஞர் ராகுல் ஷ்யாம் பண்டாரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை இன்றே அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் முறையிடவும் திட்டமிட்டுள்ளார்.
For more news update stay with actpnews.com
Android App Facebook Twitter Dailyhunt Share Chat Telegram Koo App
For more language news updates
தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ