English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 35 Second

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஐஜி தலைமையில் சிறப்பு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தவறான செய்திகளை வெளியிட்ட youtube சேனலை முடக்கவும் உத்தரவு.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கேட்டு தொடங்கிய போராட்டமானது பெரும் கலவரமாகி வன்முறையாக வெடித்தது.

இந்த கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர் இது தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி தொடர்பான வழக்கானது நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கலவரம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தற்போது சேலம் டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிஐஜிக்கு உதவியாக ஆவடி பட்டாலியன் கமான்டன்ட் ராதாகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு எஸ்பி கிங்ஸ்லீன், மற்றும் கூடுதல் எஸ்பிக்கள் திருமால் முத்துமாணிக்கம், சந்திரமௌலி ஆகியோர் இந்த விசாரணைக் குழுவில் உள்ளனர்.

இந்த குழுவானது கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மட்டும் முழுமையான விசாரணை நடத்தும் என டிஜிபி உத்தரவில குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை வைத்து அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், இந்த கலவரத்துக்கு பின்புலமாக வாட்ஸ் அப் குரூப் அமைத்து கலவரத்துக்கு ஆட்களை கூட்டியது தொடர்பாகவும், கலவரம் தொடர்பான தவறான, போலியான செய்திகளை பரப்பியோர் தொடர்பாகவும் சிறப்பு புலனாய் குழு விசாரணை நடத்தும் என டிஜிபி உத்தரவு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் youtube சேனல் குறித்து விசாரணை நடத்தி, உண்மை உறுதியாகும் பட்சத்தில் அந்த சேனல்களை முடக்கவும் இந்த குழுவுக்கு  டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மறு விசாரணைக்கு வரும்போது விசாரணை அறிக்கையை இந்த குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.