Read Time:59 Second
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டதன் காரணமாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய அரசும் கோத்தபயவுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் மீண்டும் இலங்கை திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.