Read Time:1 Minute, 16 Second
இரவின் நிழல் திரைப்படம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த ப்ளு சட்டை மாறனின் உருவ பொம்மையை செருப்பு மாலை அணிவித்து, தீயிட்டு எரித்து புதுச்சேரி நடிகர் சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனிடையே இப்படம் குறித்து யூட்யூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள நடிகர்கள் மற்றும் பன்முக கலைஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மறைமலை அடிகல் சாலையில் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், உருவ பொம்பையை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.