English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Dec 9th, 2022
0 0
Read Time:1 Minute, 43 Second

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்த‌டுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

45 புள்ளி 5 ஓவரில் 259 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, பட்லர் 60 ரன்களை எடுத்தார். இந்தியா தரப்பில் பாண்டியா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர், 260 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

42 புள்ளி ஒரு ஓவரில் 261 ரன்களை எடுத்த‌து. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. பண்ட் 125 ரன்களையும், பாண்டியா 71 ரன்களையும் குவித்தனர்.

இதன் மூலம் 2க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்ட்டும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் பெற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *