சாமானிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணம் உயரவுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை திருப்பி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், சென்ற பத்தாண்டுகளில் துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் அமைத்து அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு பணிகள் நீடித்தும், இது போன்ற திட்டங்களில் நிலைத்தன்மையை கருத்தில் கொள்ளாமலும் செலவின பலனின் மீது கவனம் செலுத்தாமல் பகுப்பாய்வு செய்ததின் காரணத்தினாலும் கடன் சுமை கடுமையாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதிகரித்துள்ளது என்றார்.
16,511 கோடி ரூபாய் கடனுக்கான வட்டி செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 37 லட்சம் பேர் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றவர்கள்.
உதய் திட்டத்தில் கையெழுத்திட்டால் எல்லாம் சரியாகும் என்றார்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதய திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பீடு சந்தித்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மின் கட்டண உயர்வை அமல்படுத்தாவிட்டால், மிகப்பெரிய பிரச்சினை உருவாகும் என எரிசக்தித்துறை அமைச்சகம் தெரிவித்தது. மானியமும் திட்டங்களும் நிறுத்தப்படும் என கராராக அவர்களால் சொல்லப்பட்டது.
இதுவரை 28 முறை மின் கட்டணங்களை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கட்டண திருத்தம் செய்யாததால், ஆத்ம நிர்பார் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும், 10 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான மானியம் வழங்கப்படாது என திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
மத்திய அரசின் தொடர் அழுத்தத்தின் காரணமாக, தற்பொழுது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துகிறது என்றார்.
இந்த மின் கட்டண உயர்வு தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு ( 42.19) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதில் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீடு மின் நுகர்வோர்களுக்கு, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 27.50 மட்டுமே உயர்த்த உபதேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூபாய் 72.50 மட்டுமே உயர்த்த உபதேசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18 லட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு ரூபாய் 147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று, மாதம் 900 வரை பயன்படுத்தும் வீடு மின் நுகர்வோர்களுக்கு கட்டண உயர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டண உயர்வை பொருத்தமட்டில், நடப்பாண்டில் இருக்கக்கூடிய மின்கட்டணம் முற்றிலும் மாற்றியமைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உபதேசிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்கு மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில், மண் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்ட மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக புதுப்பிக்கப்பட்ட சக்தி (RE) சான்றிதழ் உடன் புதுப்பிக்கத்தக்க சக்தியை வழங்குவதற்காக பசுமை கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வீட்டுக்கு உபயோகப்பாளர்கள் ரூபாய் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மின் கட்டணத்தை இணைய வழி மூலமாக கட்டாயமாக செலுத்த வேண்டும்.
திருமண மண்டபங்கள், அபரி விதமான வெளிச்சம் பயன்பாட்டிற்கு தனியாக தற்காலிக மின்விகித பட்டியலில், மின் இணைப்பு பெறாமல் அதே மின் இணைப்பில் ஐந்து சதவீத கூடுதல் கட்டணத்துடன் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண முறை நாளை முதல் அமல் இல்லை. ஒழுங்கு முறை ஆணையம் எப்பொழுது தெரிவிக்கிறார்களோ அப்பொழுது உயர்த்தப்படும். மின் கட்டண உயர்வு அமலாக சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம் என எண்ணுகிறோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மேலும், ஒழுங்கு முறை ஆணையம் ஏற்ற பின்பு தான், இதில் எங்களுக்கு எந்த அளவிற்கு லாபம் வரும் என்று தெரிய வரும் என்றும், Smart மீட்டர் பொறுத்தும் முறை சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு, மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படும். முக்கியமாக பிற மாநில ஒப்பிட்டில் தமிழகம் எவ்வளவு மின் கட்டணம் உயர்த்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.