English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 43 Second

கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் பாபுராஜ் அவரது மனைவியும் நடிகையுமான வாணி விஸ்வநாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் ஜேக்கப். ஏராளமான திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ள இவரது மனைவி வாணி விஸ்வநாத்தும் கதாநாயகி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவருடன் நீண்ட காலமாக நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், மலையாள திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக ரியாசிடமிருந்து 3.14 கோடி ரூபாய் பெற்றதாகவும், இவர்கள் பல்வேறு தவணையாக இந்த பணத்தை வங்கி கணக்கு மூலம் வாங்கியதாகவும், சில ஆண்டுகள் கடந்த பின்பும் பணம் தராததால் ரியாஸ் ஒற்றப்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருககன்றனர். நடிகர் நடிகையான கணவனும் மனைவியும் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கேரளா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.