English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Tue. Dec 6th, 2022
0 0
Read Time:2 Minute, 53 Second

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியின் போது உயிரிழந்த பாக்சிங் வீரர்…. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு…

கர்நாடகாவில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற வீரர் தனது போட்டி வீரரிடம் குத்து வாங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமே வீரரின் உயிரிழப்புக்கு காரணம் என கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் மைசூர் நகரை சேர்ந்த 23 வயதான கிக் பாக்ஸர் நிகில் கலந்து கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியின் போது, தனது போட்டி வீரரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது போட்டி வீரரின் ஒரு குத்து நிகிலின் முகத்தில் பலமாகப்பட்டது.

இதில் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனுடைய போட்டியின் போது நீக்கில் உயிரிழக்க காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே என நிகிலின் சுரேஷ் குற்றம் சாட்டினார்.

போட்டி நடைபெற்ற இடத்தில் மேட்டுகள் சரியாக போடாததால் கீழே விழுந்த போது நிகிலுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் போட்டி நடந்த இடத்தில் முதல் உதவி செய்ய மருத்துவ குழுவ அல்லது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நிகில் மரணம் அடைய காரணமாக இருந்த அந்த போட்டியின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *