English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:2 Minute, 10 Second

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பொழுது, லேசான உடல் சோர்வு ஏற்பட்டது, இதனால் பரிசோதனை மேற்கொண்டேன் அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, அவர் தனது இல்லத்தில் தனிமைபடுத்திக்கொண்டிருந்த அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் முதலமைச்சருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ள சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிகப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதோடு கொரோனா நோய் அறிகுறிகளும் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *