English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 48 Second

ஓய்வு பெறும் நாளில் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் மகேந்திர பிரதாப் தீட்சித்(60). இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் இவரை வேளாண் துறை செயலாளரால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது ஆற்காடு ஒன்றியத்தில் வேளாண் உதவி இயக்குனராக பணியாற்றிய 2013- 2014 காலகட்டத்தில் உழவர்களுக்கு துவரைப் பயிர் இடுவதற்காக வழங்கவேண்டிய மானியத் தொகையில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் 2020-ம் ஆண்டு மகேந்திர பிரதாப் தீட்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ளதால் பணி ஓய்வு வழங்க அனுமாதிக்காத நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் அவருக்கு காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.