தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் விடாய்பிடியாக போரட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து மத்திய சிறையில் இருந்து இலங்கைத் தமிழர்களை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், போராட்டத்தில் ஈடுபட்ட முகாம் வாசிகளிடம் கலந்துரையாடினார்.
விடுதலைக்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலையான இலங்கைத் தமிழர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
மேலும், முகாம்வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி அளித்தார். இந்நிகழ்வின் போது மாநகர காவல் ஆணையர் .ஜி.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.