English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 14 Second

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கைத் தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள், அகதிகளாக வந்தவர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.

அவர்களில் பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி 40 நாட்களாக உண்ணாநிலை போராட்டம், மரத்தில் ஏறி போராட்ம் என தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களது கோரிக்கையை ஏற்று 16 பேரை அரசு விடுதலை செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளர்.

சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மீது எந்த குற்றச்சாட்டும், வழக்குகளும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வலியுறுத்தியிருந்ததை குறிப்பிட்டுள்ளார். பாமகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் தாயகம் செல்ல விரும்பினாலோ அல்லது தமிழகத்திலேயே வாழ விரும்பினாலோ அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதே போன்று பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை டேக் செய்து அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் பலர் விடுத்து வரும் நிலையில், அவர்கள் விரும்பினால் தமிழகத்திலேயே வாழ விரும்பினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுருப்பது இலங்கை தமிழர்களிடையே நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

தொடர் போராட்டம் எதிரொலி: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை!

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.