English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 50 Second

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அம்மா உணவகம் சமயலறை அருகே இறந்த நிலையில் பெருச்சாளி கிடந்ததால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இங்கு,
தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்கள், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் தான் மிக பெரியதாகும். 123 அடி நீளத்திலும், 29 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தநிலையில், அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்வி குறியாக உள்ளது. அம்மா உணவகத்திற்கு நாளொன்றுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் சேர்த்து ஆயிரம் பேர் வருகிறார்கள்.

காலையில், இட்லி , பொங்கல், மதியம் சாம்பார் சாதம், லமன் சாதம், தயிர் சாதம், இரவு நேரத்தில் சாப்பாத்தி வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு சில நேரங்களில் சாப்பாத்தி மாவு தட்டுபாடு ஏற்படுவதால், உணவருந்த வரும் பொதுமக்கள், அம்மா உணவகத்தில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும், உணவகத்தில் 18 பெண்கள் வேலை செய்கின்றனர். வேலைக்கு இன்னும் ஆள்கள் தேவைப்படுவதாகவும், சம்பளத்தை தமிழக அரசு உயர்த்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அம்மா உணவகத்தின் சமையலறைக்கு வெளியே பெருச்சாளி இறந்து கிடக்கிறது. அதன்மீது ஈக்கள் மொய்கிறது. இதனால், கடுமையான தூற்நாற்றம் வீசுகிறது. மேலும், அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் சாப்பிடும் மேஜை பழுதடைந்து காட்சிபொருளாக கிடக்கிறது.

உணவகத்திற்கு வரும் குடிநீர் மெட்ரா லாரி மூலம் வருகிறது. அம்மா உணவகம் அருகே உள்ள கட்டிடத்தில் அதற்கான வாட்டர் டேங்க் 4 உள்ளது. அதற்கு ஒன்றிக்கு கூட மூடி இல்லை. மேலும், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் சுகாதரமில்லாமல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. வாட்டர் டேங்க் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆவதாக அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அம்மா உணவகத்தில் கிடைக்கும் குடிநீரை குடித்து நோயாளிகளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.