English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 27 Second

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத், அசாம், கோவா மாநிலங்களில் மாறி மாறி தங்கினர்.

இந்நிலையில், முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆளுநரை சந்தித்து முறையிட்டார். இதையடுத்து, ஆளுநரும் இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், மாலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா நாடியது. ஆனால், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த உத்தவ் தாக்கரே, ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்.

இதையடுத்து, அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பது யார் என்பது குறித்து தேவேந்திர ஃபட்நாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், இருவரும் ஆலோசித்து எடுத்த முடிவின் அடிப்படையில், புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. துணை முதலமைச்சராக பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இருவருக்கும் ஆளுநர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏவான ஏக்நாத் ஷிண்டே, சொந்த கட்சி ஆட்சியையே கவிழ்த்துவிட்டு, எதிரணியுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கும், தேவேந்திர ஃபட்நாவிஸுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போன்று, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியில் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.