English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 59 Second

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் தலை துண்டித்து கொலை – ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றம்.

முகமது நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் நுபுர் ஷர்மா ஆட்சேபத்துக்குரிய கருத்தை தெரிவித்ததற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மால்தாஸ் பகுதியில் வசித்து வந்த கன்னையாலால் என்கிற நபர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தள பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். கன்னையா லால் டைலர் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவரது கடைக்கு சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் பட்டப்பகலில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

ரியாஸ் என்கிற நபர் கணையால் ஆளை கொலை செய்ய அதை மற்றொரு நபர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்தக் கத்தி பிரதமர் மோடியின் கழுத்தை தொடும் என நம்புகிறோம் என பிரதமர் போதிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் சந்தை பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

உதய்பூர் பகுதியில் 24 மணி நேரத்திற்கு இணையத்தளங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.