உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு தமிழ் திரை உலகின் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறினர்
நடன இயக்குனர் கலா மற்றும் நடிகை ரம்பா அதிகாலையிலே தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தி மீனாவுடன் இருந்தனர்
தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான பிரபுதேவா, ரஜினிகாந்த்,சரத்குமார், இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, ரமேஷ் கண்ணா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகைகள் சங்கீதா, குஷ்பூ, பிரீதா ஹாரி , விசித்திரா, லக்ஷ்மி, சத்திய வாணி ,சங்கவி நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் , பிருந்தா, உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்
இன்று மாலை 3:30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில், நடிகை மீனாவின் கணவர் உடல் தகனம் செய்யப்பட்டது.