English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:3 Minute, 7 Second

அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக இபிஎஸ் செயல்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவரது வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

12. 9.2017 அன்று அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. 20-A சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. சட்டவிதி 20-A 2 ன் படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் எனவும் சட்டம் இயற்றப்பட்டது. 20 A (3) சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டு பதவி காலம் உள்ளது எனவும் சட்டம் உருவாக்கப்பட்டது.மக்கள் பிரதிநிதி சட்டம் 1951 இன் படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஐந்து ஆண்டுகள் பதவி தொடரும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஆகவே உள்ளார். *முன்னாள் சட்ட அமைச்சர் கூறியது போல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை.

தற்போதும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆகவே உள்ளார்.

அதிமுக சட்ட விதிகளின்படி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு உரிமை இல்லை என்றார்.

ஒருங்கிணைப்பாளரின் அனுமதி இன்றி அதிமுக கட்சியில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து உள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி அவை தவறானது.

கட்சியில் சட்டத்திற்கு புறம்பாக நடந்த நிகழ்வுகளை ஓ. பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை யாக ஆதாரங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

5 ஆண்டுகள் முடியும் வரை ஓ பன்னீர் செல்வத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது என்றும் கூறினார்.

ஒருங்கிணைப்பாளரின்அனுமதி இல்லாமல் நடக்கும் கட்சியின் செயல்பாடுகள் சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.