English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 55 Second

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் எதிரொலி தனது ஆதரவாளத்களுடன் எடப்பாடி பழனிச்சாமி 5மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,கே.பி முனுசாமி,நத்தம் விஸ்வநாதன், தங்கமணி,சி.வி சண்முகம்,ஆர்.பி உதயகுமார், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வழகறிஞர்கள் இன்பதுரை, பாலமுருகன் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி ப்மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனையில் ஈடுப்பட்டார்.

குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ள நிலையில் அதை சட்டரீதியாக எதிர் கொள்வது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.