தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.552 கோடி முதல்தவணைத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மத்திய நிதித்துறை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த 2022-23ம் ஆண்டுக்கு 15 வது நிதிக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில்,
அடிப்படை மானியத்தொகையின் முதல் தவணைத் தொகையாக ரூ.552.20 கோடியை ஒதுக்கியது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசு இந்த தொகை தொடர்பான வரவு செலவு திட்ட மதிப்பீடு குறித்து தெரவித்திருந்தார்.
அதன்படி, மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு ரூ.55.22 கோடி, பஞ்சாயத்து யூனியன்களுக்கு ரூ.165.66 கோடி, கிராம பஞ்சாயத்துக்களுக்கு ரூ.883.52 கோடி என மொத்தம் இந்த 2022-23ம் நிதியாண்டுக்கு ரூ.1104.40 கோடி தேவைப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த தொகையில் முதல் 40 சதவீதத்தை, ஊரக உள்ளாட்சிகளின் பணியாளர் சம்பளம் மற்றும் இதர விரிவாக்கத்திட்டத்துக்கு வழங்கும்படியும்.
அடுத்த 30 சதவீதத்தை குடிநீர், மழைநீர் வடிகால், நீர் மறு சுழற்சிக்காக வழங்கும்படியும், மீதமுள்ள 30 சதவீதத்தை, கழிவு மேலாண்மைக்காக ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
மேலும், முதல்தவணைத்தொயைாக மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ள ரூ.552.20 கோடியை 12,525 கிராம பஞ்சாயத்துக்கள், 388 பஞ்சாயத்து யூனியன்கள், 36 மாவட்ட பஞ்சாயத்துக்களுககு ஒதுக்கீடு செய்து விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, கிராம பஞ்சாயத்துக்களுக்கு ரூ.441.76 கோடி, பஞ்சாயத்து யூனியன்களுக்கு ரூ.82.82 கோடியும், மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு ரூ.27.61 கோடியும் என ரூ.552.20 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தளிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.